திருமணம் நிச்சயிக்கப்பட்ட 21 வயது இளம்பெண்.. பாத்ரூமில் குழந்தை பெற்றதால் அதிர்ச்சி.. இறுதியில் நடந்த எதிர்பாராத ட்விஸ்ட்..

Published : Jan 05, 2026, 10:19 AM IST

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் யாருக்கும் தெரியாமல் குழந்தை பெற்றுள்ளார். பிறந்த சில நிமிடங்களிலேயே அந்த பச்சிளம் குழந்தையை மருத்துவமனை கழிவறை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றார். 

PREV
14
21வயது இளம்பெண்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அமலிநகரை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளம்பெண் கடந்த 1ம் தேதி இரவு வீட்டில் இருந்த போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் காலை திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

24
கழிவறையில் பச்சிளங் குழந்தை

இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவருக்கு குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் இருந்துள்ளது. அப்போது அந்த இளம்பெண் யாருக்கும் தெரியாமல் அங்குள்ள கழிவறைக்குள் சென்றுள்ளார்.‌ கழிவறையில் குழந்தை பெற்ற சில நிமிடத்தில் அந்த பச்சிளங் குழந்தையை அங்குள்ள கழிவறை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் தனது இருக்கைக்கு சென்றுள்ளார்.

34
போலீஸ் விசாரணை

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர் மருத்துவமனை நிர்வாகத்தில் தகவல் தெரிவித்தனர். பின்னர் இதுதொடர்பாக திருச்செந்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் இறந்த நிலையில் இருந்த பச்சிளம் குழந்தையைகைபற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

44
விசாரணையில் அதிர்ச்சி தகவல்

மேலும் அந்த இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியானது. திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்த இளைஞருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பமுற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவர் வீட்டிற்கும் தெரியாமல் தனியார் மருத்துவமனையில் குழந்தையை பெற்று கழிவறையில் வீசியது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்த சில நிமிடங்களில் பச்சிளம் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read more Photos on
click me!

Recommended Stories