பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த விதத்தைப் பார்த்து சபையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை நடைபெற்று வருகிறது. கரூர் அம்பாவிதம், கிட்னி முறைகேடு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. குறிப்பாக இன்றைய தினம் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான மருத்துவமனையில் நடைபெற்ற கிட்னி முறைகேடு தொடர்பாக கவனம் ஈர்க்கும் வகையில் அதிமுக உறுப்பினர்கள் தங்கள் சட்டையில் கிட்னிகள் ஜாக்கிரதை என்ற வாசகத்தை தங்கள் சட்டையில் ஒட்டியபடி வந்தனர்.
கிட்னி முறைகேடு மற்றும் இதில் அரசு எடுத்த நடவடிக்கை தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விரிவான விளக்கம் அளித்தார்.
23
நயினார் நாகேந்திரனுக்கு தலைவர்கள் வாழ்த்து
இதனிடையே தமிழக பாஜக மாநிலத் தலைவரும், பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் இன்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு நயினார் நாகேந்திரனுக்கு எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
33
நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து சொன்ன முதல்வர்
அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையிலேயே நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்து அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தினார். நயினார் தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், “எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தால் கூட நயினார் நாகேந்திரன் ஒரு நாள் கூட கோபமாக பேசி பார்த்ததில்லை. எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்கக்கூடியவர். அவையில் இருந்து வெளிநடப்பு செய்தால் கூட சிரித்த முகத்துடன் செல்பவர். அவர் இன்று 64ல் இருந்து 65வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு என் சார்பாகவும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.