Mk Stalin: பாஜக.வின் பாதம் தாங்கி என்பதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நொடிக்கு ஒருமுறை நிரூபித்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடி உள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற திமுக எம்பி மணியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மணமக்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் தீய சதி செயலை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
23
உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம்
தேர்தல் ஆணையத்தின் சதியை முறியடிக்கும் முயற்சியாக அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் முழுமையான திருத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ளது. இதனைத் தான் பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. பீகாரைத் தொடர்ந்து பிற மாநிலங்களிலும் அதே பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம்.
33
பாஜக.வின் பாதம் தாங்கி பழனிசாமி
எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி இதில் கூட இரட்டை வேடத்தை காட்டி உள்ளார். பாஜக.வுக்கு பயந்து தேர்தல் ஆணையத்தை எதிர்க்காமல் உள்ளார். அதே நேரத்தில் கட்சி தொண்டர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் பழனிசாமிக்கு சந்தேகம் இருப்பதைக் காட்டுகிறது. தான் பாஜக.வின் பாதம் தாங்கி என்பதை அவர் நொடிக்கு ஒருமுறை நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.