தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கை நாளை வெளியிடப்படவுள்ளது. இருமொழிக் கொள்கை, பொதுத்தேர்வுகள் ரத்து உள்ளிட்ட பரிந்துரைகள் ஏற்கப்படுமா? மாணவர்களின் எதிர்காலத்தை எவ்வாறு இந்தக் கொள்கை மாற்றியமைக்கும்?
கல்வி தான் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழி வகுத்து கொடுக்கும் எனவே சிறந்த கல்வியை உருவாக்க பல்வேறு வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை வெளியானது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது, குறிப்பாக மும்மொழிக் கொள்கை, பொதுதேர்வு, நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் போன்ற அம்சங்களுக்கு எதிரான அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவத்தது.
24
தமிழக கல்வி கொள்கை
இதனையடுத்து , தமிழ்நாட்டிற்கென தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்க தி.மு.க. அரசு 2022 ஜூன் 1-ல் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி த. முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
2024 ஜூலை 1-ல் இந்தக் குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அந்த பரிந்துரையில், தமிழ் முதல் மொழியாகவும், ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழக நிலை வரை பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும். மாநிலம் முழுவதும் தமிழ் மற்றும் ஆங்கிலம் இருமொழிக் கொள்கை தொடர வேண்டும். 3, 5, மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும். நீட் தேர்வு இருக்கக்கூடாது என பரிந்துரைகள் வழங்கப்பட்டது.
34
தமிழக கல்வி கொள்கை- பரிந்துரை
மேலும் நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப் படுத்துவதை தடை செய்ய வேண்டும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6 வயது பூர்த்தியானவர்கள் தான் முதல் வகுப்பில் சேர முடியும் 5 வயது பூர்த்தியாளர்கள் 1-ம் வகுப்பில் சேரலாம் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
மேலும் இரு பெற்றோர்களையும் இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் 1 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், ஸ்போக்கன் இங்கிலீஷ்” தவிர “ஸ்போக்கன் தமிழ்” மீது முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டது.
இந்த அறிக்கை மீது தமிழக அரசு பல்வேறு ஆலோசனைகளை நடத்தியது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தமிழக கல்வி கொள்கையை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இரு மொழிக்கொள்கை, 3, 5, மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து போன்ற முக்கிய பரிந்துரைகள் அரசு சார்பாக ஏற்கப்படும் என தகவல் கூறப்படுகிறது. மேலும் வேறு என்ன என்ன பரிந்துரைகளை அரசு ஏற்கவுள்ளது என நாளை வெளியாகவுள்ள தமிழக கல்வி கொள்கையில் தெரியவரும்