புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மின்சார ரயில்களால் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி பணிமனையில் இன்று (செப்டம்பர் 7) இரவு 8 மணி முதல் நாளை (செப்டம்பர் 8) அதிகாலை 4 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி
சென்னை கடற்கரையில் இருந்து இன்று மாலை 6.45, இரவு 8, 9.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து இன்று இரவு 7.35, 8.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.