Published : Aug 14, 2025, 06:31 AM ISTUpdated : Aug 14, 2025, 06:32 AM IST
சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே பணி நிரந்தரத்தை சுட்டிக்காட்டி 13 நாட்களாகப் போராடி வந்த துப்புரவு தொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாநகராட்சியில் குறிப்பிட்ட மண்டலங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பை தனியார் வசம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதனை கடுமையாக எதிர்த்த துப்புரவு தொழிலாளர்கள் மாநகராட்சியின் முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், துப்புரவுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கடந்த 13 நாட்களாக மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
24
அரசு பேச்சுவார்த்தை
போராட்டத்தை விடுத்து பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும், தொழிலாளர்களின் பணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று அரசு தரப்பில் பல முறை அழைப்பு விடுத்தும் அதனை ஏற்க தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். பணியாளர்கள் போராட்டம் நடத்துவது பொதுமக்களின் நடைபாதை என்பதால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
34
உயர்நீதிமன்றம் அதிரிடி உத்தரவு
வழக்கு தொடர்பான விசாரணை புதன் கிழமை நடைபெற்றது. அப்போது தொழிலாளர்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் போராட்டம் நடைபெறும் இடம் பொதுமக்களுக்கான நடைபாதை என்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அரசு சார்பில் போராட அனுமதிக்கப்படும் பகுதியில் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடரலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுமே ரிப்பன் மாளிகையைச் சுற்றி காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். காவல் துறை தரப்பில் அடுத்தடுத்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு களைந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதனை ஏற்க போராட்டக்காரர்கள் மறுத்துவிட்டனர்.
இதன் தொடர்ச்சியாக இரவு 11.30 மணி முதல் போராட்டக்காரர்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். அப்போது காவல் துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்க் 'ஜெய் பீம்' என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து 13 பேருந்துகளில் அப்புறப்படுத்தப்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ள திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.