கேரம் உலகக்கோப்பையின் தங்க மகள்..! சென்னை கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி அள்ளிக் கொடுத்த முதல்வர்!

Published : Dec 15, 2025, 02:32 PM IST

கேரம் உலகக்கோப்பையில் 3 தங்கப் பதக்கம் வென்று அசத்திய சென்னை கீர்த்தனாவுக்கு முதல்வர் ஸ்டாலின் 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். இதேபோல் மேலும் 2 வீராங்கனைகளுக்கும் ஊக்கத்தொகையை வழங்கியுள்ளார்.

PREV
14
கேரம் உலகக்கோப்பையில் சாதித்த சிங்கப் பெண்கள்

மாலத்தீவில் 2.12.2025 முதல் 6.12.2025 வரை நடைபெற்ற 7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா ஆகியோர் பதக்கங்கள் வென்றனர். இதில் கீர்த்தனா மட்டும் மகளிர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் மகளிர் குழுப் போட்டி ஆகிய மூன்று பிரிவுகளிலும் 3 தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

24
ஊக்கத்தொகை வழங்கிய ஸ்டாலின்

இதேபோல் காசிமா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கங்களும், மித்ரா ஒரு தங்கம், ஒரு வெள்ளி என இரண்டு பதக்கங்களும் வென்றனர். 

இந்த நிலையில், கேரம் உலகக் கோப்பையில் சாதித்த தங்க மகள் கீர்த்தனாவுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

 மேலும் காசிமாவுக்கு 50 இலட்சம் ரூபாயும், மித்ராவுக்கு 40 இலட்சம் ரூபாயும் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கி, வாழ்த்தினார்.

34
SDAT ஸ்குவாஷ் உலகக் கோப்பை வீரர்கள்

மேலும் இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியின் சார்பில் 9.12.2025 முதல் 14.12.2025 வரை சென்னையில் நடைபெற்ற SDAT ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2025 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் - ஜோஷ்னா சின்னப்பா, அபே சிங், அனஹத் சிங், வேலவன் செந்தில்குமார், ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இயக்குநர் சைரஸ் போன்சா மற்றும் பயிற்றுநர்கள் ஹரிந்தர் பால் சிங், ஆலன் சோய்சா ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

44
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு விருது

இதேபோல் டெல்லியில் 9.12.2025 அன்று நடைபெற்ற 3-வது Cll Sports Business Awards 2025-இல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு வழங்கப்பட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலத்திற்கான (THE BEST STATE PROMOTING SPORTS DEVELOPMENT AWARD) விருதை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories