AIADMK
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை மறைத்து தவறாக தெரிவித்ததாக குற்றசாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.
Edappadi palanisamy
மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் காவல் துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க: ரேஷன் கார்டில் மாற்றம் செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
chennai high court
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார்தாரர் மிலானி எடப்பாடி தொகுதியை சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ? அல்ல. வேட்புமனுவில் எந்த தகவலையும் மறைக்கவில்லை. எனவே, இந்த புகாரே விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிடப்பட்டது. காவல் துறை தரப்பில் சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சேலம் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
EPS
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அதாவது எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்த புகாரில், போலீசார் விசாரணையை தொடரலாம். அவர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற கூறிய நீதிபதி அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.