ரேஷன் கார்டில் மாற்றம் செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Published : Jan 22, 2025, 08:07 PM IST

தமிழகத்தில் 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் நிலையில், ரேஷன் கார்டில் பெயர், முகவரி போன்ற திருத்தங்களைச் செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். 

PREV
15
ரேஷன் கார்டில் மாற்றம் செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Ration shop

ஏழை எளிய மக்கள் பயன்  பெறும் வகையில் நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் மொத்தமாக 35,083 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் 2 கோடியே 25 லட்சத்தி 24 ஆயிரத்து 784 குடும்ப அட்டைகள் உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பாமாயில், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.  

25
Ration Card

இதன் மூலம் 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மானிய விலையில் உணவு பொருட்களை வாங்கி வருகிறார்கள். ரேஷன் கார்டுகள் இருந்தால் மட்டுமே அரசின் திட்டங்களை உடனடியாக பெற முடியும். அந்த வகையில் மகளிர் உரிமை தொகை திட்டமாக இருந்தாலும், பொங்கல் பரிசு தொகுப்பாக இருந்தாலும் ரேஷன் அட்டை ரொம்ப முக்கியமானது. அந்த வகையில் தற்போது புதிதாக 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. 

35
Special Camp

இந்நிலையில் ரேஷன் கார்டில் உள்ள நபர்களின் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்ட பல வித குறைபாடுகளை சரி செய்ய முடியாமல் அலைந்து வருகின்றனர். அந்த வகையில் ரேஷன் அட்டையில் உடனடியாக திருத்தம் செய்யும் வகையில்  சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

45
Ration Card Special Camp

அதாவது பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும்  வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 25.01.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

55
Ration Card correction

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை
மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories