TNPSC தேர்வுக்கு தயாராகுறீங்களா.? இலவச பயிற்சிக்கு தமிழக அரசு அழைப்பு-விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா?

First Published | Jul 16, 2024, 3:10 PM IST

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி -II மற்றும் IIA -ற்கான (TNPSC-GROUP-II AND IIAPrelims) இலவச பயிற்சி வகுப்புகள் 18-07-2024 முதல் நடைபெறவுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 
 

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு

அரசு பணிகளில் சேர்வதற்கான தகுதித்தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. அந்த வகையில் குரூப் 2விற்கான தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வு அரசு பதவிகளில் முக்கிய மற்றும் உயர்ந்த பதவிகளுக்கான தேர்வாகும். இந்தநிலையில் இந்த தேர்வில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர்  ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி -||விற்கு 507 காலிப்பணியிடங்களும், 

கல்வித்தகுதி என்ன.?

தொகுதி IIA விற்கு 1,820 காலிப்பணியிடங்களும். மொத்தமாக (TNPSC-GROUP-II &IIA )2327 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 20.06.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும்.

தொகுதி -II மற்றும் IIA -ற்கான முதல் நிலைதேர்விற்கு (TNPSC-GROUP-II AND ΠAPrelims) பயிற்சி வகுப்புகள், சென்னை கிண்டியிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் 18-07-2024 முதல் (திங்கள் முதல் வெள்ளி வரை) நடத்தப்பட உள்ளன.

Latest Videos


இலவச பயிற்சி முகாம்

இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை கிண்டியிலுள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலைநாட்களில் அணுகுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றார்கள்.

IAS Transfer : தமிழக அரசின் முக்கிய IAS அதிகாரிகள் திடீர் இடமாற்றம்.!யார் எந்த இடத்திற்கு மாற்றம் தெரியுமா.?

மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்

மேலும், விவரங்களுக்கு, decgc.chennai24@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்  ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார். 

‘ஜூலை 17’ இந்த மாநில வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு லீவ்.. விடுமுறை பட்டியல் இதோ!

click me!