Chennai chain snatching: Robbery at 7 places in one day! சென்னையில் இன்று காலை அனைத்து காவல் நிலையமும் அலறியது இந்த ஒரு சம்பவத்தால், காலை 6 மணி முதல் 7 மணிக்குள் பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், அடையாறு, சைதாப்பேட்டை, கிண்டி என அடுத்தடுத்து இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக சாலையில் நடக்கவே பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த வகையில் இன்று காலை திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியில் வேலைக்கு சென்று கொண்டிருந்த லட்சுமி என்ற பெண்ணின் கழுத்தில் இருந்து 5 சவரன் தங்க செயின் மர்ம நபர்களால் பறிக்கப்பட்டுள்ளது,
சென்னையில் தொடர் செயின் பறிப்பு
அடுத்ததாக சாஸ்திரி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த அம்புஜம் என்கிற மூதாட்டியிடம் அரை சவரன் செயின், கிண்டி எம் ஆர் சி மைதானம் அருகே நடை பயிற்சி மேற்கொண்டிருந்த நிர்மலா என்கிற மூதாட்டியிடம் இருந்து ஒரு சவரன் பறிக்கப்பட்ட நிலையில் கிண்டி காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார். அஅடுத்ததாக சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனை மருத்துவமனை அருகே வேலைக்குச் சென்று கொண்டிருந்த இந்திரா என்ற பெண்ணிடம் ஒரு சவரன் நகை பறிக்கப்பட்டது. வேளச்சேரி டான்சி நகர் உள்ளிட்ட இரண்டு இடங்களிலும் பள்ளிக்கரணையில் ஒரு இடங்களிலும் செயின் பறிப்பு நடைபெற்றுள்ளது.
வட மாநில கும்பல்
ஒரு மணி நேரத்தில் அடையார் காவல் மாவட்டம் உட்பட்ட ஒரே நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறியது அப்பகுதிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து செயின் பறிப்பு குற்றவாளிகளை சிசிடிவியின் மூலம் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது குற்றவாளிகள் பள்ளிக்கரனையில் தொடங்கி வேளச்சேரி, திருவான்மியூர், அடையார் என அடுத்தடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே ஒரே கும்பல் தான் இந்த தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
விமானத்தில் குற்றவாளிகள் கைது
இதனையடுத்து போலீசார் அந்த நபர்களை கண்டறிய முற்பட்ட நிலையில் இன்று காலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அப்போது கொள்ளயடிக்கப்பட்ட 15 சவரன் நகையோடு விமானம் மூலம் வெளிமாநிலங்களுக்கு தப்பி செல்ல அந்த வடமாநில இளைஞர்கள் முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையில் இருந்து ஐதராபாத் சென்று அங்கிருந்து மும்பை வழியாக உத்தர பிரதேசம் செல்ல முயன்றது கண்டறியப்பட்டது. இதே கும்பல் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தாம்பரம் பகுதியில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.