வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. முன்பு ஒரு வீட்டில் ஒரு பைக், ஸ்கூட்டர் இருந்தாலே பணக்கார்ராக பார்த்த நிலை மாறி தற்போது ஒரே வீட்டில் பல கார்கள் அணிவகுத்து நிற்கிறது. அதிலும் வாகனங்களுக்கு தங்களுக்கு பிடித்த எண்களை பதிவு எண்களாக வாங்குவார்கள்.
இதற்காக பல லட்சம் ரூபாய் பணம் கட்டி பேன்சி எண்கள் வாங்குவார்கள். வாங்கும் பைக் மற்றும் கார்களை விட பேன்சி எண்களின் விலை தான் உச்சத்தை தொடும். இந்த நிலையில் வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில் வரைவு திருத்த விதிகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது