குடிமகன்களுக்கு முக்கிய செய்தி! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! எப்போது தெரியுமா?

Published : Aug 30, 2025, 12:44 PM IST

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பர் 5ஆம் தேதி மிலாதுன் நபி பிறந்தநாளை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

PREV
15

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுக்கடைக்கு செல்பவர்கள் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் தலையில் முக்காடு போர்த்திக்கொண்டு மறைந்து சென்று வந்தார்கள். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மது பாட்டில்களுடன் செல்பி எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆண்கள் நிகராக பெண்களும் மதுக்குடித்து வருகின்றனர். திருமண நிகழ்ச்சி, பிறந்த நாள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் எது இருக்ககோ இல்லையோ மது விருந்து இல்லாமல் இருப்பதில்லை. அதேநேரத்தில் துக்க நிகழ்ச்சி என்றாலும் இதே நிலை தான். பெரிய நகரங்கள் மட்டுமின்றி கிராமங்கள் வரை இந்த கலாச்சாரம் பரவி உள்ளது. இதனால் நாடு முழுவதும் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

25

இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தமிழக அரசு எடுத்து நடத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்தாலும் வருமானத்தை கிள்ளி கொடுக்காமல் அளிக்கொடுக்கும் துறையாக டாஸ்மாக் நிறுவனம் இருந்து வருகிறது. அடுத்ததப்படியாக பத்திரப்பதிவுத்துறை இருந்து வருகிறது.

35

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்டாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 110 கோடிக்கும், வார இறுதி நாட்களின் ரூ.150 முதல் 200 கோடி அளவுக்கும் விற்பனை நடைபெறுகிறது. அதுவும் தீபாவளி, பொங்கல் என்று வந்துவிட்டால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சொல்லப்போனால் அரசே டாஸ்மாக்கில் வரும் வருமானத்தில் இயங்குவதாகவே கூறப்படுகிறது.

45

அரசு துறையில் பல்வேறு துறைகள் இருந்தாலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த டாஸ்மாக் கடை விடுமுறை நாட்களில் குடிமகன்கள் முன்கூட்டியே மதுபாட்டிலை வாங்கி வைத்து விடுகின்றனர். குறிப்பாக புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற விஷேச நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் விடுமுறை என்பதே இல்லை.

55

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு அடுத்த விடுமுறை நாட்கள் எப்போது வருகிறது என்பதை பார்ப்போம். செப்டம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமை மிலாதுன் நபி அதாவது நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. அன்றை தினம் தடையை மீறி மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைத்தாலோ அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். ஆகையால் செப்டம்பர் 5ம் தேதி விடுமுறை வருவதால் குடிமகன்கள் இப்போதே அதிர்ச்சி அடைந்துள்ளனர். விடுமுறைக்கு முந்தைய நாளே மதுபாட்டில்கள் வாங்கி வைக்க இப்போதே தயாராகி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories