இந்நிலையில் விசாரணையில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கதமிழக அரசு சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி அதன்படி, துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முன்னர், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மீதான குற்றச்சாட்டுக்களில் முகாந்திரம் உள்ளதா, மிகப்பெரிய தண்டனை, குறிப்பாக பணி நீக்கம் செய்வதற்கு உரியதா என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும். இதன் மூலம், தேவையற்ற தாமதம் தவிர்க்கப்படும். அரசு ஊழியர் ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தால், ஓய்வு பெறும் நாளில் பணியிடைநீக்கம் செய்வதை தவிர்த்து, 3 மாதங்களுக்கு முன்னதாகவே உரிய முடிவை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் ஓய்வு பெறுவதைக் கருத்தில்கொண்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் உரிய விளக்கத்தை அளிக்க வாய்ப்பு கொடுத்து, இயற்கை நியதிக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.