அதேநேரம் அன்புமணிக்கு போட்டியாக தனது மகளான கவிதாவை அரசியல் மேடைகளில் ஏற்றி வந்தார் ராமதாஸ், இதனால் ராமதாஸின் மகளான கவிதாவிற்கும்- மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ராமதாஸ் நெருங்கிய வட்டாரங்கள் கூறும்போது எந்தவித மோதலும் இல்லையென அடித்து கூறினார்கள். அன்புமணியும் அவரது அக்காவான கவிதாவும் சம்பந்தியாவார்கள், முகுந்தனின் தம்பி தான் அன்புமணியின் மருமகனாவர்,
இந்த நிலையில் ஏன் தந்தை - மகன் இடையே மோதல் ஏற்பட்டது என பாமகவினருக்கு மட்டுமில்ல அரசியல் விமர்சகர்களுக்கும் குழப்பம் ஏற்பட்டது. அன்புமணி- ராமதாஸ் இடையிலான மோதல் நடிப்பாக இருக்குமோ என நினைத்த போது தான் உள்ளுக்குள் நீறு பூத்த நெருப்பாக சுசீலா இருப்பது தற்போது வெளிப்படையாக வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.