தமிழக வருவாய் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விதிகளுக்குட்பட்டு நிரப்பப்படும்.
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை அவ்வப்போது அரசு நிரப்பி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வருவாய் துறையில் கீழ் அனைத்து மாவட்டங்களில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் கடந்த 3 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்து வருகிறது. மாவட்ட ஆட்சியரின் பொது பிரிவு நேர்முக உதவியாளர் மூலம் இப்பணியிடங்களை நிரப்பி கொள்ள அனுமதி வழங்கியும் தற்போது வரை இப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
25
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா
இந்நிலையில், இனியும் கால தாமதமின்றி அனைத்து மாவட்டங்களில் 3 ஆண்டுகளுக்கு கீழ் உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
35
காலிப்பணியிடங்கள்
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்:- வருவாய்த் துறையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மூன்று வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களே விதிகளுக்கு உட்பட்டு நிரப்பிடலாம் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டும், இதுவரை அந்த காலிப் பணியிடங்களை நிரப்பிட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே. மேற்காணும் காலிப்பணியிடங்களை நிரப்பிட. மேலும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக நிரப்பிட நடவடிக்கை மேற்கொண்டு. அதன் அறிக்கையினை அரசுக்கு அனுப்புமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பணியிடங்களுக்கு கடந்த முறை 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனவே அதனை பின்பற்றியே கல்வித் தகுதி உள்ளிட்டவை இருக்கும் என தெரிகிறது. காலிப் பணியிடங்கள், விண்ணப்ப நடைமுறைகள் தொடர்பாக மாவட்ட வாரியாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
55
தேர்வு முறை
வயது வரம்பு
விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும். அதிகபடியாக பொதுப் பிரிவினர் 32 வரையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 34 வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் கணவரை இழந்த ஆதரவற்ற பெண்கள் அதிகபட்சமாக 37 வயது வரை இருக்கலாம். முன்னாள் படைவீரர்களுக்கு வயது வரம்பில் 53 வரை தளர்வு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உள்ளன.
தேர்வு முறை
நேர்முகத் தேர்வு (Interview) அடிப்படையில் தேர்வு. சில சந்தர்ப்பங்களில் எழுத்துத் தேர்வு அல்லது சான்றிதழ் சரிபார்ப்பு சேர்க்கப்படலாம். தேர்வு இல்லாத நேரடி நியமனம் சில மாவட்டங்களில் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.