இன்று முதல் 7 நாட்களுக்கு! மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்! குஷியில் பொதுமக்கள்!
தமிழகத்தில் வரும் 22ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 22ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடையில் வெயில் தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். பொது சுகாதாரத்துறையும் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும், அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் 22ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம்
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிங்க: மாதம் 14 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை! மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து கழகம்!
மார்ச் 23ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் மார்ச் 24ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை அதிகரிக்கும்
இன்று முதல் மார்ச் 22ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
இதையும் படிங்க: விடுமுறை அறிவிப்பு வந்தாச்சு! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு!
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.