இதனையறிந்த போலீசார் சென்னையில் பாஜகவின் மூத்த தலைவர்கள் அனைவரையும் முன்கூட்டியே கைது செய்யபட்டனர். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?
தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? என அண்ணாமலை சவால் விடுத்திருந்தார்.
தொடை நடுங்கி திமுக அரசு.! உங்களால் என்ன செய்ய முடியும்- சவால் விடும் அண்ணாமலை