திருச்செந்தூரை தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலில் அடுத்த அதிர்ச்சி!
Rameswaram Temple: திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் கோவில்களில் அடுத்தடுத்து பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Rameswaram Temple: திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் கோவில்களில் அடுத்தடுத்து பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரின் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். முருகனின் அறுபடை வீடுகளில் 2வது படை வீடு திருச்செந்தூர். இக்கோவில் உலக பிரசித்தி பெற்றது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதுவும் வார விடுமுறை நாட்கள் என்றால் சாமி தரிசனம் செய்யவே சுமார் 3 மணிநேரம் ஆகிவிடும்.
இந்நிலையில் கடந்த 16ம் தேததி ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ஓம்குமார் என்பவர் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த போது மூச்சு திணறல் எற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை எற்படுத்தியது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிர்ச்சி! பக்தர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலை போல ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவில் உள்ளது. திருக்கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக வடமாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம்.
இதையும் படிங்க: விடுமுறை அறிவிப்பு வந்தாச்சு! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு!
இந்நிலையில் ராமநாதசுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை ஸ்படி லிங்கம் தரிசனம் செய்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜ் தாஸ் என்ற பக்தர் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி திடீரென மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் திருக்கோவில் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இதனையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.