ரயிலில் டன் கணக்கில் மூட்டை மூட்டையாக வரும் வெங்காயம்.! வெளியாகப்போகும் குட் நியூஸ்

First Published | Oct 31, 2024, 3:32 PM IST

தக்காளி விலை குறைந்த நிலையில், வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மத்திய அரசு வெங்காயத்தை கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வெங்காயம் விலை குறைந்துள்ளது.

வெங்காயம், தக்காளி விலை

அசைவ மற்றும் சைவ உணவு எதுவாக இருந்தாலும் தக்காளி மற்றும் வெங்காயம் இல்லாமல் சமைக்க முடியாது. எனவே சமையலுக்கு முக்கிய தேவையாக இந்த இரண்டு காய்கறிகளும் உள்ளது. எனவே இதனை விலை குறைந்தால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைவார்கள். அதுவே இதன் விலை உச்சத்தை தொட்டால் அவ்வளவு தான் வீட்டில் சமையல் பெரும் பிரச்சனையாக மாறிவிடும்.

இந்த நிலையில் தான் கடந்த ஒரு மாதமாக வெங்காயமும், தக்காளியும் போட்டி போட்டு விலையானது அதிகரித்தது. அந்த வகையில் வெங்காயத்தை ஓவர் டேக் செய்த தக்காளி ஒரு கிலோ 100 ரூபாயை தாண்டியது. 

tomato onion

ஒரு கிலோ தக்காளி, வெங்காயம் விலை என்ன.?

இதன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தாக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து ஒரு சில நாட்களில் தக்காளியின் விலையானது குறைய தொடங்கியது. தற்போது 3அல்லது 4 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

அதே நேரத்தில் வெங்காயத்தின் விலையானது தொடர்ந்து உச்சத்திலையே நீடிக்கிறது. ஒரு கிலோ 60 முதல் 75 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக வெளிநாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கியது ஒரு காரணமாக கூறப்படுகிறது.


Onion

வெங்காயம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

மேலும் மழையின் காரணமாக வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தான் வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்த வகையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறையின் விலை நிலைப்படுத்தல் நிதியின் கீழ் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு வெங்காயத்தை கொள்முதல் செய்து பல்வேறு மாநிலங்களிக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய அனுப்பி வருகிறது. 

அந்த வகையில் நாசிக்கிலிருந்து அனுப்பப்பட்ட 840 மெட்ரிக் டன் வெங்காயம் ரயில் மூலம் சென்னைக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வந்தது. இதேபோல தலைநகர் டில்லியில் வெங்காயத்தின் விலையானது உச்சத்தில் உள்ளது. எனவே அங்கு கடந்த 20ஆம் தேதி 1600டன் வெங்காயம் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

Onion Price Today

ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்

தற்போது இரண்டாவது முறையாக  840 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றிச்சென்ற ரயில் தலைநகர் டெல்லியில் விநியோகம் செய்வதற்காக டெல்லி கிஷன்கஞ்ச் ரயில் நிலையத்தை சென்றடைந்தது. மத்திய அரசு சார்பாக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் காரணமாக டெல்லி, சென்னை உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வரும் நாட்களில் தமிழகத்திற்கு கூடுதல் வெங்காயத்தை அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?

இதனிடையே சென்னை கோயம்பேட்டில் காய்கறி விலையை பொறுத்துவரை தக்காளி ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 60 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

குடைமிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,  சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைகோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இஞ்சி விலை என்ன.?

கொத்தவரை ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனையாகிறது.

Latest Videos

click me!