தப்பி தவறி இந்த ஒரு பொருளை ரயிலில் கொண்டு போகாதீங்க; சிக்கினா 3 ஆண்டு சிறை, 5000 அபராதம்!!

First Published | Oct 24, 2024, 1:27 PM IST

ரயில் போக்குவரத்து பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அந்த வகையில் ரயில்களில் ஒரு சில பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி அந்த பொருட்களை கொண்டு சென்றால் சிறை தண்டனையோடு அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை 

Special Train

பொதுமக்கள் விரும்பும் ரயில் பயணம்

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்வதற்கு ரயில் பயணம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. அந்த வகையில் பேருந்து. சொந்த வாகனங்களில் பயணிப்பதை விட ரயில்களில் பயணம் செய்யவே அதிகமான மக்கள் விரும்புவார்கள். குறிப்பாக குறைந்த கட்டணம், பாதுகாப்பு வசதி, கழிவறை வசதி, தூங்கிக்கொண்டே பயணிக்கலாம் என பல காரணங்கள் உள்ளது. எனவே 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாளுக்கு நாள் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது. ரிசர்வேஷன் செய்த பெட்டிகளில் கூட நிற்க முடியாத அளவிற்கு கூட்டம் உள்ளது. 

Train Ticket

ரயில்களில் தடை செய்யப்ப்ட்ட பொருட்கள் என்ன.?

இந்தநிலையில் ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில் பெட்டிகளில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் விசாரணை நடத்தியும், ரயில்களில் இருந்து இறக்கியும் விடுகின்றனர். மேலுல் ரயில்களில் பலவித கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் மது குடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகரெட் குடிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுப்புகள், கேஸ் சிலிண்டர்கள், எரியக்கூடிய இரசாயனங்கள், அமிலம், துர்நாற்றம் வீசும் பொருட்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos


Train

ரயில்களில் பட்டாசு கொண்டு செல்லலாமா.?

மேலும் பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயில்களில் கொண்டு செல்வதை இந்திய ரயில்வே கடுமையாகத் தடை செய்துள்ளது. அந்த வகையில் 
ரயில்களில் பட்டாசு எடுத்துச் சென்றால், 3ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது, அபராதமாக 5,000 ரூபாய் விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் பட்டாசுகளை கொண்டு செல்ல விரும்புவார்கள். குறிப்பாக தங்கள் அலுவலகத்தில் இலவசமாக கொடுக்கும் பட்டாசை கொண்டு செல்ல பிரியப்படுவார்கள். ஆனால் இலவசமாக கிடைக்கிறது என ஆசையில் கொண்டு சென்றால் 5ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் நிலை உருவாகும் என ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர்.
 

சிறை தண்டனை, அபராதம்

ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடி மருந்து, எரிபொருட்கள் எடுத்துச் செல்ல தடையானது நீண்ட காலமாக உள்ளது. இது தொடர்பாக பெரும்பாலான மக்களிடம்  விழிப்புணர்வு உள்ளது. ஆனால் சிலர் விதிகளை மீறி பட்டாசுகளை கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். இதனால், அவர்களுக்கு மட்டுமல்லாமல், மற்ற பயணியருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும்.

அந்த வகையில் முதல் முறையாக பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்கள் கொண்டு செல்லும் போது பிடிபட்டால், 1,000 ரூபாய் அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என தெரிவித்தனர்.  தொடர்ந்து, விதிமீறல்களில் ஈடுபட்டால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். என எச்சரித்துள்ளனர்.

click me!