தீபாவளி பண்டிகை பொதுமக்களுக்கு குட் நியூஸ்.! ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.! அமைச்சர் அதிரடி

First Published Oct 24, 2024, 1:08 PM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு கூட்டுறவுத்துறையின் மூலம் அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் முக்கிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். குறிப்பாக தமிழக அரசு சார்பாக தீபாவளி பண்டிகையையொட்டு நவம்பர் 1ஆம் தேதியும் விடுமுறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை பொதுமக்களுக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து தீபாவளி பண்டிகைக்கு தயாராகும் வகையில் ஆடைகள் வாங்குவது, பட்டாசுகள் வாங்குவது, இனிப்புகள் தயாரிப்பது என தற்போதே தீபாவளி கொண்டாட்டம் கலைகட்டியுள்ளது.
 

இது மட்டுமில்லாமல் தொடர் விடுமுறை காரணமாக சொந்த  ஊருக்கு சென்று உறவினர்களோடு தீபாவளியை கொண்டாடவும் திட்டமிட்டு வருகின்றனர். இதற்காக ரயில்கள், பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். தமிழக போக்குவரத்து துறை சார்பாக 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

Latest Videos


இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின்படி பொதுமக்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழ்நாடு முழுவரும் செயல்படும் 24,610 முழு நேர நியாயவிலைக்கடைகள்,

ration shop

10,164 பகுதி நேர நியாயவிலைக்கடைகள் என மொத்தம் 34,774 நியாயவிலைக்கடைகளில் குடிமைப் பொருட்களைப் பெற்று தீபாவளிப் பண்டிகையினை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து முழுநேர மற்றும் பகுதி நேர நியாயவிலைக் கடைகளும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (27.10.2024) அன்று முழுவதுமாக வழக்கம்போல் செயல்படும் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்

click me!