ரேஷன் அட்டை இருந்தாலே வங்கியில் ஈஸியா லோன் வாங்கலாம்.! வெளியான தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

First Published | Oct 24, 2024, 11:51 AM IST

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குவது மற்றும் புதிய சேமிப்புக் கணக்கு தொடங்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நியாய விலைக் கடைகள் மூலம் மக்களுக்கு சேமிப்புக் கணக்கு தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

RATION CARD

ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு

நியாய விலைக்கடையில் பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டுகள் மூலம் மானிய விலையில் உணவு பொருட்களை வாங்கி வருகின்றனர். அந்த வகையில் அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை, பாமாயில் என உணவு பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குவது தொடர்பாகவும், புதிதாக கணக்கு தொடங்குவது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த வகையில் நியாய விலைக்கடைகள் மூலம் மத்திய கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்களுக்கு சேமிப்பு கணக்கு  தொடங்குவது தொடர்பாக அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு தமிழக அரசின் கூட்டுறவுத்துறை கடிதம் எழுதியுள்ளது.

TAMILNADU BANK

கூட்டுறவு சங்கத்தின் புதிய அறிவிப்பு

அதன் படி மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் விவசாய உறுப்பினர்களுக்கு பயிர்க்கடன், உரக்கடன், கால்நடை பராமரிப்புக் கடன், மத்தியகால வேளாண் கடன் போன்ற பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.  கடந்த 2023 ஆம் ஆண்டில், 18.36 இலட்சம் விவசாய உறுப்பினர்களுக்கு ரூ.15,500 கோடி அளவிற்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது சங்கங்களில் விவசாய உறுப்பினர்களாக உள்ள நபர்களின் சராசரி வயது 50 ஆக உள்ளது. எனவே, அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் புதிய வங்கியியல் திட்டங்களை வகுத்து. கூட்டுறவு கடன் நிறுவனங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி வங்கியினால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் அரசுத் திட்டங்கள் பொது மக்களை சென்றடையும் வகையில் மத்திய கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் வேண்டும்.

Tap to resize

BANK

கூட்டுறவு வங்கி கடன்

மத்திய கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்களின் தோராயமாக 53ஆக உள்ளது. அமையப்பெற சராசரி வயது கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் குடிமைப்பொருட்கள் பெறும் பொதுமக்களுக்கு பல்வேறு துறைகளின் நலத்திட்டங்களும் நியாய விலைக் கடைகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மூலம், கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு மற்றும் கடன் சேவைகள் பொது மக்களை சென்றடையும் வகையில், நியாய விலைக் கடைகள் மூலம் பொது மக்களுக்கு அப்பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் சேமிப்புக் கணக்கு துவக்கிட நடவடிக்கை மேற்கொள்ளவும், பல்வேறு அரசின் கடன் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளவும். மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்., 

SMART CARD

கடன் திட்டங்கள் குறித்த கையேடு

அனைத்து நியாய விலைக் கடைகளிலும், மத்திய கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு திட்டங்கள், நிரந்தர வைப்புத் திட்டங்கள் மற்றும் கடன் திட்டங்கள் குறித்ததான கையேடுகள் விநியோகிக்கவும். நியாய விலைக் கடை பணியாளர்களை கொண்டு, சேமிப்புக் கணக்கு துவக்குவதற்கான விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு வழங்கி விண்ணப்பங்களை KYC விவரங்களுடன் பூர்த்தி செய்து,

நியாய விலைக்கடைப் பணியாளர்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறவும் அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மூலம் துவக்கப்படும் சேமிப்புக் கணக்குகளுக்கு. நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக. துவக்கப்படும் கணக்கு ஒன்றுக்கு ரூ.5 வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. , 

LOAN

கடன் திட்டங்கள், அரசு திட்டங்கள்

மேலும், நியாய விலைக் கடைகள் மூலம் துவக்கப்படும் சேமிப்புக் கணக்குதாரர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள். அரசின் கடன் திட்டங்கள், மற்றும் நிரந்தர வைப்புத்திட்டங்கள் குறித்ததான கையேடுகள், மற்றும் வங்கியின் மூலம் வழங்கப்படும் மின்னணு பரிவர்த்தனை வசதிகள், ஏடிஎம் கார்டு வசதியினையும் மற்றும் வங்கிச் சேவையினை எளிதில் பெறும் வகையில் அவர்களுக்கான கணக்கு துவக்கியவுடன்

Education Loan

கண்காணிக்க உத்தரவு

இவ்வசதிகள் அடங்கிய தொகுப்பு (Account opening Kit)ஐ அவர்களுக்கு உடனடியாக சென்றடைவதை உறுதி செய்து, நியாய விலைக் கடைகள் மூலம் துவக்கப்பட்ட சேமிப்புக் கணக்குகள், நடப்புக் கணக்குகள் மற்றும் நிரந்தர வைப்புக் கணக்குகள் குறித்ததான முன்னேற்றத்தினை கண்காணித்து திறனாய்வு கூட்டத்தின்போது இதற்கான விவரத்தினை தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மண்டல இணைப்பதிவாளர்கள், இதுகுறித்து, நியாய விலைக் கடை நடத்தும்கூட்டுறவுச் சங்கங்களுக்கு பண்டகசாலைகளுக்கு துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) மூலம் தக்க அறிவுரை வழங்கி, மத்திய கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் சேமிப்புக் கணக்கு துவக்கிடவும், இதன் மீதான நடவடிக்கைகளை கண்காணித்திடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
 

Latest Videos

click me!