தமிழ்நாடு டூர்
சுற்றுலா என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அந்த வகையில் காடு, மலை, அருவிகளில் குளியல் என்றால் சொல்லவா வேண்டும். அந்த அளவிற்கு மக்கள் ஆர்வமாக படையெடுப்பார். தமிழத்தை பொறுத்த வரை ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட குளுமையான பகுதிகளும், அருவிகளை கொண்ட குற்றாலம், ஒக்கேனக்கல் பகுதியும், கடல் சார்ந்த பகுதியும் உள்ளது.
அதே நேரத்தில ஆன்மிக சுற்றுலாவிற்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களுக்கு மக்கள் படையெடுப்பார்கள். இந்தநிலையில் தான் கோயில், மலைப்பகுதி, அருவி, கடல் போன்ற அனைத்து இடங்களையும் ஒரே நேரத்தில் சுற்றிப்பார்க்கும் வகையில் சூப்பர் திட்டத்தை தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் தொடங்கியுள்ளது.