2026 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூலை 7 முதல் ஜூலை 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட், புகைப்படம், வங்கி விவரங்கள் மற்றும் முகவரிச் சான்று போன்ற தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இஸ்லாமியர்களில் 5 கடமைகளில் முக்கியமானது ஹஜ் பயணமாகும். அந்தவகையில் ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் பண்டிகை தினத்தில் சவூதியில் உள்ள மஹ்கா மற்றும் மதினாவைவிற்கு செல்ல பல நாடுகளில் இருந்தும் பல கோடி மக்கள் செல்வார்கள். அந்த வகையில் இந்தியாவில் இருந்து இஸ்லாமியர்கள் மத்திய அரசு சார்பாக மானியத்தோடு அழைத்து செல்லப்படுகிறார்கள்.
அந்த வகையில் 2026ஆம் ஆண்டிற்கு ஹஜ் பயணம் செல்ல திட்டமிட்டவர்களுக்கு தற்போது விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹஜ் 2026-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழுவானது ஹஜ் விண்ணப்பங்களைப் பெற தொடங்கியுள்ளது என்பதை தமிழ் நாடு மாநில ஹஜ் குழு அறிவிக்க விரும்புகிறது.
24
இஸ்லாமியர்களின் ஹஜ் பயணம்
இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் 2026-ற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 07.07.2025 முதல் 31.07.2025 (இரவு 11.59 வரை) முடிய ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது https//hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) ஐபோன் (அல்லது) ஆண்ட்ராய்டு கைபேசியில் "HAJ SUVIDHA* செயலியினை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
ஹஜ் 2026-ல் விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப் படிவத்தை கட்டணம் ஏதுமின்றி சமர்ப்பிக்கலாம். இயந்திரம் மூலம் படிக்கத் தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளைநிற பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உறைத் தலைவரின் இரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும்.
34
ஹஜ் பயணம் - விண்ணப்பிப்பது எப்படி.?
கடந்த ஆண்டைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் தங்கள் விருப்பத்தின் வரிசை அடிப்படையில் இரண்டு புறப்பாட்டு தளங்களை தேர்ந்தெடுக்கலாம். வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. குறைந்தபட்சம் 31-12-2026 வரையில் செல்லக்கூடிய இயந்திரம் மூலமாக படிக்கத் தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்க வேண்டும்.
ஹஜ் 2026-ற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழுவின் இணையதள முகவரி https://hajcommittee.gov.in மூலம் தெரிந்து கொள்ளலாம். 2025 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கான "நுசுக் மசார்" போர்ட்டலின்படி பாஸ்கோர்ட்டுக்காக புதிதாக விண்ணப்பிப்பவர்கள் குடும்ப பெயர்/கடைசி பெயர் ஆகியவற்றை காலியாக விடாமல் கண்டிப்பாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்கிற நிபந்தனை உள்ளது.
மேலும், ஹஜ் 2026-ல் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள தேர்ந்தெடுக்கப்படும் புனிதப் பயணிகள் நபர் ஒருவருக்கு முதல் தவணைத் தொகையாக ரூ.1.50 இலட்சத்தை செலுத்த தயார் நிலையில் இருப்பதுடன் தங்களிடம் செல்லத்தக்க பாஸ்போர்ட் உள்ளதை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 31.7.2025 ஆகும்.
மேலும் ஹஜ் பயணிகள் மரணம் அல்லது கடுமையான மருத்துவ நோய் தவிர வேறு காரணத்திற்காக பயணத்தை இரத்து செய்ய நேரிட்டால் அபராதம் விதிக்கப்படும். இதனால் விண்ணப்பதாரர்களுக்கு நிதி இழப்பு ஏற்படக்கூடும். எனவே ஹாஜிகள் தங்கள் தயார்நிலை மற்றும் ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்கான உறுதிப்பாட்டை கவனமாக பரிசீலித்த அறிவுறுத்தப்படுகிறார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.