அதிமுகவுடன் கூட்டணியா.?
அந்த வகையில் ஆளும் கட்சியாக உள்ள திமுகவை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டணியானது தமிழக வெற்றிக்கழகம் அமைக்கும் என செய்திகள் பரவியது. அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகம் 80 தொகுதிகள் அதிமுக கூட்டணியில் கேட்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த தகவலை தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் அவர்கள் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.