Published : Jul 09, 2025, 08:09 AM ISTUpdated : Jul 09, 2025, 08:44 AM IST
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன,
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனே திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.
நாடு முழுவதும் இன்று போராட்டங்கள் தொடங்கிய நிலையில் வட மாநிலங்களிலும், கேரளாவிலும் பெரும்பாலான பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் இயங்கவில்லை. அதே நேரம் தமிழகத்தை பொறுத்தவரை இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச, சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
25
வட மாநிலங்களில் வேலை நிறுத்தம்
இதன் காரணமாக இன்று பேருந்துகள் ஆட்டோக்கள் ஓடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் தற்போது வரை தமிழகத்தில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதே போல ஆட்டோக்களும் இயங்கி வருகிறது. மேலும் கடைகளும் வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளும் செயல்படுகிறது. எனவே இன்று காலை பணிக்கு செல்பவர்களுக்கு பேருந்து கிடைக்காதோ என தயங்கிய நிலையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், மாநகரின் 32 பணிமனைகளில் இருந்து 650 க்கு மேற்பட்ட வழித்தடங்களுக்கு வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அனைத்து பணிமனைகளிலும் ஒரு பேருந்து கூட ஊழியர் இல்லாமல் நிறுத்தி வைக்கப்படவில்லை,
35
சென்னையில் ரயில், பேருந்து மறியல்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர் நடத்துனர்களுக்கு மாற்றாக ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஓட்டுனர்கள் நடத்துனர்கள் பெருமளவில் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இது மட்டுமில்லால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகள் சீராக இயங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதே நேரம் இன்று காலை 10 மணிக்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றை பந்தின் விளைவாக, வங்கி சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்படும் என கருதப்படுகிறது
பணம் திரும்பப் பெறுதல், காசோலை அனுமதி, ஆவண சமர்ப்பிப்பு மற்றும் கிளைக்குள் ஆதரவு போன்ற வங்கி நடவடிக்கைகள் பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளது. இதை போல காப்பீட்டு அலுவலகங்கள் மற்றும் தபால் நிலையங்களும் மூடப்படவுள்ளது. அதே நேரம் டிஜிட்டல் வங்கி சேவைகள் மற்றும் ஆன்லைன் காப்பீட்டு போர்டல்கள் தொடர்ந்து செயல்படும்.
55
அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை
இதனிடையே தமிழக தலைமைச் செயலாளர் வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில், பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி பங்கேற்றால் அரசு ஊழியர்ள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையுடன், நோ வொர்க் நோ பே என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படாது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை 11 மணிக்கு அரசு ஊழியர்கள் பணிக்கு வந்தது தொடர்பான தகவலை மேல் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.