ரம்புட்டான் பழத்தை ஆசையாக சாப்பிட்ட சிறுவன்.! திடீரென துடி துடித்து பலியான பரிதாபம்- நடந்தது என்ன .?

Published : Jul 03, 2025, 03:42 PM IST

நெல்லையில் ரம்புட்டான் பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்த 5 வயது சிறுவனின் தொண்டையில் பழத்தின் விதை சிக்கியதால் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
14
ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் பலி

பழங்களை சிறுவர்கள் ஆசையாக விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் நெல்லையில் ரம்புட்டான் பழத்தை விரும்பி சாப்பிட்ட சிறுவனின் தொண்டையில் அந்த பழத்தின் கொட்டை சிக்கியதால் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரம்புட்டான் பழம் இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

 "ரம்புட்" என்ற மலாய் வார்த்தையிலிருந்து இதன் பெயர் உருவாகியது, இந்த பழமானது வெளிப்புறம் மென்மையான முள் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். உள்ளே ஜெல்லி போன்ற சதைப்பகுதி உள்ளது, இதில் ஒரு விதை இருக்கும். இந்த பழமானது இனிப்பு மற்றும் லேசான புளிப்பு சுவை கொண்டது.

24
ரம்புட்டான் பழம்

தற்போது ரம்புட்டான் பழத்தின் சீசன் தொடங்கியுள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அதிகளவு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் நெல்லையில் ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த சிறுவன் ரியாஸ், வழக்கம்போல் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்துள்ளான். அப்போது ரம்புட்டான் பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, தவறுதலாக பழத்தின் விதை அவனது தொண்டையில் சிக்கியதாக கூறப்படுகிறது. 

34
சிறுவனின் தொண்டையில் சிக்கிய ரம்புட்டான் விதை

இதனால், அந்த சிறுவன் என்ன செய்வது என்று தெரியாமல் திணறியுள்ளான் ஒரு கட்டத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கண்கள் மேலே சென்றுள்ளது. உடனடியாக அந்த சிறுவன் ரியாஸை காப்பாற்ற உறவினர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் முடியாத நிலையில் அந்த சிறுவனை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கு சிறுவனை சோதித்த மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தகவல் தெரிவித்ததையடுத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

44
துடி துடித்து சிறுவன் பலி

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சிறுவர்கள் காசுகளையும், இரும்பு, ஊசி போன்றவற்றை விழுங்கிய நிலையில் அவ்வப்போது உயிரிழப்பு ஏற்பட்டு வரும் நிலையில் ரம்புட்டான் பழத்தை ஆசையாக சாப்பிட்ட சிறுவன் தொண்டையில் கொட்டை சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே சிறுவர்களுக்கு பழங்களை கொடுப்பதாக இருந்தாலும் பெற்றோர்கள் கவனமோடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories