கோமரி நோய் என்பது கால்நடைகளை, குறிப்பாக பசு, மாடு, ஆடு, பன்றி மற்றும் எருமை போன்றவற்றைத் தாக்கும் ஒரு வைரஸ் தொற்று நோயாகும். இது மிகவும் தொற்றக்கூடியது மற்றும் வேகமாகப் பரவக்கூடியதாகும். இந்த நோயானது நோய்த்தொற்று உள்ள கால்நடைகளுடன் ஆரோக்கியமான கால்நடைகள் நேரடியாகத் தொடர்பு கொள்வது மூலம் பரவுகிறது.
மாசுபட்ட தீவனம், நீர், காற்று, வாகனங்கள், உபகரணங்கள் அல்லது மனிதர்களின் ஆடைகள் மூலமாகவும் பரவி வருகிறது. நோயுற்ற கால்நடைகளின் உமிழ்நீர், பால், சிறுநீர், மலம் மற்றும் வாய், கால் பகுதிகளில் உருவாகும் கொப்புளங்களில் உள்ள திரவம் பாதிப்பு ஏற்படுகிறது.