நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு போன்ஸ் தொடர்பான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை சேர்ந்த ஊழியர்களுக்கு போகஸ் அறிவிக்கப்பட்டது. இன்று காலை தமிழ்நாட்டில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்: இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திட நீலகிரி மாவட்டத்தின் வனப் பகுதிகள் மற்றும் பிற பொருத்தமான பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலைவாய்ப்பு அளிப்பதை நோக்கமாகக்கொண்டு, தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகமானது (TANTEA) 1976 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இதையும் படிங்க: TN Heavy Rain: நெருங்கும் தீபாவளி! மிரட்டப்போகுகிறதா கனமழை? வானிலை மையம் சொன்ன அதிர்ச்சி தகவல்!
TANTEA Employees
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடிக்கிடையிலும், 1093 ஓய்வுபெற்ற தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதியப் பணப்பலன்களை வழங்கும்பொருட்டு ரூ.29.38 கோடியினை வழங்கியது, ஓய்வு பெற்ற தேயிலை தோட்ட கழக தொழிலாளர்கள் வசிக்க ஏதுவாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கான
பயனாளிகளின் பங்களிப்பிற்கு என ரூ.13.46 கோடி வழங்கியது, தேயிலை தோட்டக் கழக தொழிலாளர்களின் தினக்கூலியை ரூ.438/- ஆக உயர்த்தி ஆணையிட்டது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக ஊழியர் நலன் காக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்து வருகிறார்கள்.
வனத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவன பணியாளர்களுக்கும் ஒரே அளவில் 20% போனஸ் வழங்க முதலைமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக பணியாளர்களுக்கும் ரூ.5.72 கோடி செலவில் 20% போனஸ் வழங்கப்படும். இதனால் 3939 பணியாளர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.