TN School Student: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை 7518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுதினர்.
25
11th Class Student
11, 12ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி
அதேபோல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வினை 7,557 பள்ளிகளில் படித்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்களும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகளும், 4755 தனித் தேர்வுகளும், 137 சிறைவாசிகள் என 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுதினர். இந்நிலையில் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 04-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
35
Bonus marks
தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் 83 மையங்களில் விடைத்தாள் திருத்துதல் பணிகள் நடைபெறுகின்றன. சுமார் 46,000 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் 11ம் வகுப்பு கணினி அறிவியல் தேர்வில் 24 கேள்வி தவறாக கேட்கப்பட்டதால் எந்த பதிலை எழுதி இருந்தாலும் 2 மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் குஷியை எற்படுத்தியுள்ளது. வரும் மே 19ம் தேதி 11ம் வகுப்பு முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
55
SSLC Bonus Mark
10ம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்
ஏற்கனவே 10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் ஒரு மதிப்பெண் பிரிவில் நான்காவது கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே ஒரு மதிப்பெண் கருணை மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.