எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் சோதனை நடத்தியதில், மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில் கட்சி நிர்வாகிகளுடன் அவ்வப்போது சேலம் மற்றும் சென்னையில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான நிலையில் மற்ற கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகளை இபிஎஸ் மேற்கொண்டு வருகிறார்.
24
சென்னை வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து இபிஎஸ் வீட்டிற்குள் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முடிவில் வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால், காவல்துறைக்கு கிடைத்த தகவல் பொய்யானது என்றும் புரளி என தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
34
ஏற்கனவே சேலம் வீட்டிற்கு மிரட்டல்
ஏற்கெனவே மே 25ம் தேதி எடப்பாடி பழனிசாமியின் சேலம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவரது வீடு மற்றும் கார் ஷெட் உள்ளிட்ட இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதை அடுத்து அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்திருந்தார்.