நெற்றியில் பொட்டு, கையில் கயிறு கட்டும் இந்துக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம்ணு A.ராசா சொல்வாரா? பாஜக

Published : Apr 02, 2025, 01:41 PM ISTUpdated : Apr 02, 2025, 01:46 PM IST

ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். 2026 தேர்தலில் இறை நம்பிக்கையுள்ள இந்துக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என சவால் விடுத்துள்ளார்.

PREV
15
நெற்றியில் பொட்டு, கையில் கயிறு கட்டும் இந்துக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம்ணு A.ராசா சொல்வாரா? பாஜக
ஆ.ராசா  சர்ச்சை பேச்சு

திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா  நீலகிரியில் திமுக மாணவரனி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் திமுகக்காரர்களும் பொட்டு வைத்து கயிறு கட்டி, சங்கியும் பொட்டு வைத்து கயிறு கட்டினால் யார் சங்கி, யார் திமுககாரன் என்று தெரியாமல் போய்விடும். ஆகவே, சாமி கும்பிடுங்கள். விபூதி வைத்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால், திமுக வேட்டி கட்டிவிட்டால் அதை அழித்துவிடுங்கள் என பேசியிருந்தார். இந்நிலையில் திமுகவுக்கு தைரியமும், திராணியும் இருக்குமானால் இறை நம்பிக்கையுள்ள இந்துக்கள் எவரும் 2026 தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்கத் தேவையில்லை என சொல்ல முடியுமா என எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 

25
எச்.ராஜா பதிலடி

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திமுக கரை வேட்டி கட்டுபவர்கள் பொட்டு வைக்க வேண்டாம். கையில் கயிறு கட்ட வேண்டாம் என்று திமுகவில் உள்ள இந்துக்களிடம் சொல்லும் ஆ.ராசா அவர்களுக்கு..? நெற்றியில் பொட்டு வைத்து கையில் கயிறு கட்டும் பக்கமுள்ள இந்துக்கள் யாரும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று ஒட்டுமொத்த இந்துக்களிடமும் சொல்லும் தைரியமும், திராணியும் இருக்கிறதா? 

இதையும் படிங்க: பொட்டு வைத்து கயிறு கட்டுவது சங்கிகளின் அடையாளம்! அதை திமுககாரர்கள் செய்யாதீங்க! ஆ.ராசா சர்ச்சை பேச்சு!

35
இந்துக்களின் வாக்குகள் மட்டும் திமுகவுக்கு வேண்டுமா

திமுகவில் இருக்கும் இஸ்லாமியர்கள் மசூதிக்கு செல்லுங்கள் ஆனால் தொப்பி அணியாதீர்கள், தாடி வைக்காதீர்கள் என்று ஆ.ராசா சொல்வாரா? திமுகவில் இருக்கும் கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்கு செல்லுங்கள் ஆனால் கழுத்தில் சிலுவை அணியாதீர்கள் என்று ஆ.ராசா சொல்வாரா? என்ன ஒரு அபத்தமான பேச்சு? இந்துக்களின் வாக்குகள் மட்டும் திமுகவுக்கு வேண்டும்? ஆனால் இந்துக்களின் சமய அடையாளங்கள் மற்றும் சம்பிரதாய சடங்குகள் மட்டும் வேண்டாமா? 

45
மு.க.ஸ்டாலின்

திமுகவுக்கு தைரியமும், திராணியும் இருக்குமானால் இறை நம்பிக்கையுள்ள இந்துக்கள் எவரும் 2026 தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்கத் தேவையில்லை. இறை நம்பிக்கையற்ற நாத்திக சிந்தனை உள்ளவர்கள், ஈவெராவின் கொள்கைகளை ஏற்பவர்கள் மட்டுமே திமுகவுக்கு வாக்களித்தால் போதும் என்று பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா மு.க.ஸ்டாலின் அவர்களே?

55
உதயநிதி ஸ்டாலின்

டெங்கு மலேரியா கொசுக்களை அழிப்பது போல சனாதனத்தை பின்பற்றுபவர்களை அழிப்பேன் என்று பேசியவர் தானே திமுகவை சேர்ந்த துணை முதலமைச்சர் .உதயநிதி ஸ்டாலின். திமுக இந்துக்களை அழிக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது. இந்து விரோத திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணமிது அது காலத்தின் கட்டாயம் என்பதை இந்துக்கள் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என எச்.ராஜா தெரிவித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories