நித்தியானந்தா கைலாசா
இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா கைலாசா என்ற தனிநாட்டை உருவாக்கி அங்கிருந்து அடிக்கடி யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு நித்தியானந்தா குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அனைத்திற்கும் ஒரே வீடியோவில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நித்தியானந்தா வீடியோ
நான் வீழ்வேன் என நினைத்தாயோ? என்ற தலைப்பில் நித்தியானந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நிறைய பேர் நான் செத்துப் போய்ட்டேன்னு வீடியோ போட்டிருக்காங்க. 3 மாதங்களில் 4,000 வீடியோக்கள் போட்டிருக்காங்க. எப்ப நான் 4,000 வீடியோக்களை பார்த்து முடிக்கிறது? சிலபஸ் கவர் பண்ணி முடிக்காத எக்ஸாமுக்கு போற ஸ்டூடன்ட்ஸ் மாதிரி நான் வந்து உட்கார்ந்துகிட்டு இருக்கேன். எனக்கும் சந்தேகமாக இருக்கு.
நான் உயிரோடுதான் இருக்கேனா இல்லையா
நான் உயிரோடு இருக்கேனா இல்லையான்னு. எல்லா சோசியல் மீடியா, மெயின் ஸ்ட்ரீம் மீடியா, யூடியூப், ஃபேஸ்புக் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பஞ்சாயத்து கூடி ஏதோ ஒரு வீடியோவைப் போட்டு, நான் உயிரோடுதான் இருக்கேனா இல்லையா? ஏதா ஒரு முடிவுக்கு வாங்கப்பா. எப்படியோ எனக்கு வந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்கப்பா என தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தா எச்சரிக்கை
அதேபோல் நித்தியானந்தா வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில்: மகனுங்களா. சும்மா இருந்திருந்தா 126 வயதில்தான் பேக் பண்ணிட்டு போலாம்னு இருந்தேன். வீணாப் போனவனுங்க ஏகப்பட்ட டைம் வேஸ்ட் பண்ணிட்டானுங்க. இதுக்கு மேல தொடர்ந்து வம்பு செய்தீர்கள் என்றால் என் வாழ்நாளை 1,000 வருஷமாக்கிடுவேன்டா. வேணாம். வம்பு பண்ணாதீங்க என தெரிவித்துள்ளார்.