திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் பீரோ தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தங்கமணி. இந்த தம்பதிக்கு வித்யா என்ற மகளும், சரவணன் என்ற மகனும் உள்ளனர். வித்யா கோவை அரசு கல்லுாரியில் பட்டப்படிப்பு 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். திருப்பூரை சேர்ந்த வெண்மணி என்ற இளைஞருடன் வித்யா காதலித்து வந்துள்ளார்.
24
யாருக்கும் தெரியாமல் புதைத்த பெற்றோர்
இந்நிலையில் கடந்த 30ம் தேதி வித்யாவின் பெற்றோர் கோவிலுக்கு சென்றுவிட்டனர். அவரது அண்ணன் வெளியில் சென்ற நிலையில் வித்யா மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது வித்யாவின் மீது பீரோ சரிந்து விழுந்து ரத்த வௌ்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இதனையடுத்து போலீசாருக்கு தெரிவிக்காமல் வீட்டு அருகே உள்ள மயானத்தில் வித்யாவின் உடலை புதைத்து விட்டனர்.
இதனால் சந்தேகமடைந்த காதலன் வெண்மணி காதலி இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வித்யாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டு எடுக்கப்பட்டு பல்லடம் தாசில்தார், டிஎஸ்பி முன்னிலையில் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவில் வித்யாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது தெரியவந்தது.
44
ஆணவ கொலை
இதை தொடர்ந்து வித்யாவின் தந்தை தண்டபாணி (53), அண்ணன் சரவணகுமார் (24), காதலன் வெண்மணி மற்றும் வித்யாவின் உடலை புதைத்த உறவினர்கள் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில் அண்ணன் சரவணகுமார், தங்கை வித்யாவை ஆணவ கொலை செய்தது தெரியவந்தது. வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை எவ்வளவு சொல்லியும் கேட்காமல் காதலித்ததால், தனது தங்கை வித்யாவை தான் இரும்பு கம்பியால் அடித்து கொன்றதாக போலீசாரிடம் சரவணண் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.