DMART யை இழுத்து மூடு..!முன்பு கத்தி, டோல் கேட் இப்போது வேல்முருகனின் புதிய ஆட்டம் ஆரம்பம்

Published : Aug 31, 2025, 03:53 PM IST

தமிழகத்தில் சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதால், டி மார்ட் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். 

PREV
15
டி மார்ட் தடை

தமிழகத்தில் சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, டி மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

25
சிறு வணிகர்கள் பிரச்சனை

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண்மை, மீன்வளம், நெசவுத்துறை போன்ற துறைகளில் சிறு உற்பத்தியாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று அவர் குற்றம்சாட்டினார். அதேபோல், இப்போது சில்லரை வணிகத்திலும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து, உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

35
வேல்முருகன் கருத்து

ஜிஎஸ்டி, ஆன்லைன் விற்பனை போன்ற காரணங்களால் நாட்டின் சில்லரை வணிகம் ஏற்கனவே சிரமங்களை சந்திப்பதும், ஒன்றிய அரசின் தவறானது பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் டி மார்ட் உள்ளிட்ட பெரிய சங்கிலித் தளங்களின் செயல்பாடு சிறு, குறு, நடுத்தர வணிகர்களின் வாழ்வாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது.

45
வணிகம்

மளிகை, உணவு, பானம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விற்பனை நகர்ப்புறங்களில் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளது, இதனால் உள்ளூர் வியாபாரிகள் சரிவை எதிர்கொள்வதாகவும் அவர் விளக்கினார். மேலும், உள்ளூர் வணிகர்களையும் உற்பத்தியாளர்களையும் காக்க வேண்டும் என்றால், அந்நியர்களின் சில்லரை வணிக நுழைவு தடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

55
கார்ப்பரேட் நிறுவனங்கள் தடை

இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முன்னெடுத்துள்ள மாபெரும் போராட்டத்திற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனது முழு ஆதரவை அளிப்பதோடு, அந்த போராட்டத்தில் பங்கேற்று துணை நிற்கும் என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories