Holiday: தொடர் விடுமுறை! அரசு போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்! பயணிகளின் கவனத்திற்கு..!

Published : May 25, 2026, 08:36 PM IST

Holiday: தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து நெல்லை, மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம். 

PREV
13
தொடர் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழகத்தில் நாளை மே 26ம் தேதி (செவ்வாய்கிழமை], 27ம் தேதி (புதன்கிழமை], 28ம் தேதி (வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை மற்றும் முகூர்த்தம்), 29ம் தேதி (வெள்ளிகிழமை முகூர்த்தம்), 30ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 31ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை] வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்லை, மதுரைக்கு சிறப்பு பேருந்துகள்

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துச் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 26ம் தேதி (செவ்வாய்கிழமை அன்று 475 பேருந்துகளும், 27ம் தேதி (புதன்கிழமை) அன்று 845 பேருந்துகளும் 28ம் தேதி வியாழக்கிழமை, 29ம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் 30ம் தேதி சனிக்கிழமை ஆகிய நாட்களில் தினசரி 455 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

23
திருவண்ணாமலை, பெங்களூரு

இதேபோல் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செவ்வாய்கிழமை அன்று 85 பேருந்துகளும், 27ம் தேதி மமுதல் 30ம் தேதி வரை ஒவ்வொரு நாட்களிலும் 170 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து செவ்வாய்கிழமை அன்று 35 பேருந்துகளும், 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஒவ்வொரு நாட்களிலும் 60 பேருந்துகளும் மற்றும் பெங்களூர் திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

33
எப்படி முன்பதிவு செயவது?

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 31/05/2026 [ஞாயிற்றுக்கிழமை) அன்று 1085 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் செவ்வாய்கிழமை அன்று 13877 பயணிகளும், புதன்கிழமை அன்று 18979 பயணிகளும், வியாழக்கிழமை அன்று 11726 பயணிகளும், வெள்ளிக்கிழமை அன்று 10675 பயணிகளும், சனிக்கிழமை அன்று 11304 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 18320 பயணிகளும் பயனாம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு ww-w.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories