ஆசிய விளையாட்டு போட்டிகள்.. வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு ஊக்கத்தொகை - 9 கோடி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

First Published | Oct 12, 2023, 11:15 PM IST

சீனாவில் நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, 17 தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில், 28 பதக்கங்களை குவித்து வந்த தமிழ்நாட்டு வீரர் - வீராங்கனையர் 20 பேருக்கு மாண்புமிகு தகா முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மொத்தம் ரூ.9.40 கோடி அளவிலான ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்தினார்.

Subha Venkadesan

கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி வரை சீன நாட்டின் ஹாங்சூவில் நடைபெற்ற 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 48 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 20 வீரர், வீராங்கனைகள் 9 தங்கம், 11 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்றனர்.

இந்த நிகழ்வில் தமிழக வீரர்கள் மற்றும் இந்திய வீரர்களுக்கு சுமார் ஒன்பது கோடி மதிப்பிலான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. குறிப்பாக ஓட்டப்பந்தய வீராங்கனை, தமிழக வீரர் சுபா வெங்கடேசனுக்கு 60 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

AUS vs SA: ஒரேயடியாக சரண்டரான ஆஸ்திரேலியா 177க்கு ஆல் அவுட்; நெட் ரன் ரேட்டில் தென் ஆப்பிரிக்கா நம்பர் 1 இடம்!

Ramesh Kumar Ramanathan

அதேபோல ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்ற தமிழக டென்னிஸ் வீரர் ராம்குமார் ராமநாதன் அவர்களுக்கு 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வழங்கினர்.
 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D


Harinder Pal Singh

இந்த விழாவில் தமிழக வீரர்களோடு சேர்த்து இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த பிற மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் சிலருக்கும் ஊக்கத்தொகைகள் அளிக்கப்பட்டது. குறிப்பாக இந்திய ஸ்குவாஷ் வீரர் ஹரீந்தர் பால் சந்து சிங் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
 

Chess Champion

இந்த நிகழ்ச்சியில் தமிழக செஸ் வீரரான ஆர் பிரக்ஞானந்தா பங்கேற்ற நிலையில், அவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

Asian Games

மேலும் தமிழக வீரர் ராஜேஷ் ரமேஷ் அவர்களுக்கு 80 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், தமிழக வீராங்கனை தீபிகா பள்ளிக்கால் கார்த்தி அவர்களுக்கு 70 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்.

இந்தியா பாகிஸ்தான் போட்டிக்காக அகமதாபாத்தில் சுப்மன் கில் பயிற்சி- IND vs PAK போட்டியில் பங்கேற்பாரா?

Latest Videos

click me!