Armstrong Murder Case: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தமிழக அரசு இரண்டாவது முறையாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். திருவேங்கடம் காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். சிறையில் பக்கவாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்த ஏ1 குற்றவாளியான நாகேந்திரன் சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
24
சிபிஐ விசாரணை
இந்நிலையில் இந்த வழக்கை காவல்துறையினர் நியாயமாக விசாரிக்கவில்லை என்றும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு கூறி விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் மற்றும் அவரது பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
34
தமிழக அரசு மேல்முறையீடு
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதில் இந்த உத்தரவுக்கு எதிராக இடைக்காலத் தடை கோரியும், சிபிஐ விசாரணை உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு உத்தரவிட்டதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு இரண்டாவது முறையாக மனுத் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏ2 குற்றவாளியும், ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் உச்ச நீதிமன்றத்தில் திடீரென மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் தன்னையும் இடையீட்டு மனுதாரராக சேர்க்க கோரியும், இந்த வழக்கை சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குகள் அனைத்தும் விரைவில் விசாரணைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.