விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?

Published : Dec 22, 2025, 02:38 PM IST

ஆற்காடு நவாப் முகமது அலியின் பேச்சை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விஜய்யும், தவெகவினரும் மேடையில் செய்வதறியாது திகைத்தனர்.  ‘’சொந்த கட்சி மேடையிலேயே அசிங்கப்பட்ட ஒரே தலைவர் விஜய் தான்'' என திமுகவினர் விஜய்யை சமூகவலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

PREV
15
தவெக சமத்துவ கிறிஸ்துமஸ் விழா

தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா மாமல்லபுரத்தில் உள்ள இன்று நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய், அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் ஆற்காடு நவாப் முகமது அலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தவெக தலைவர் விஜய் குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார். குழந்தைகளுக்கு கேக் ஊட்டி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

25
விஜய் பேசியது என்ன?

இந்த விழாவில் பேசிய விஜய், ''நானும், தவெகவும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100% உறுதியாக உள்ளோம். இதனால் தான் தவெக கொள்கைகளுக்கு மதசார்பற்ற சமூகநீதி கொள்கைகள் என பெயர் வைத்தோம். கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும். அந்த ஒளி நம்மை வழிநடத்தும்'' என்றார். 

விஜய்க்கு முன்பாக பேசிய ஆற்காடு நவாப் முகமது அலி தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று திமுக அரசை பாராட்டுவது போல் பேசியதால் விஜய்யும், தவெகவினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

35
தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம்

அதாவது விழாவில் பேசிய ஆற்காடு நவாப் முகமது அலி, ''நம்முடைய மாநிலம் தமிழ்நாடு ஒற்றுமைக்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருகிறது. இங்கு இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம் என்ற வேறுபாடு கிடையாது. தமிழ்நாடு மதங்களை விட மனித நேயத்துக்கு தான் மரியாதை கொடுக்கும். தமிழ்நாடு குழந்தைகள், பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது'' என்று தெரிவித்தார்.

45
ஆற்காடு நவாப் பேச்சால் விஜய் ஷாக்

தவெக தலைவர் விஜய் திமுக அரசை மிக கடுமையாக எதிர்த்து வருகிறார். தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என உறுதியாக கூறி வரும் விஜய், அண்மையில் ஈரோட்டில் நடந்த விழாவில் தமிழகத்தில் பெண்களுக்கு, மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து உள்ளதாக கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார். 

தொடர்ந்து விஜய் திமுகவை சரமாரியாக விமர்சித்து வரும் நிலையில், தவெக மேடையில் அதுவும் விஜய் முன்பு ஆற்காடு நவாப் முகமது அலி தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என பேசியது திமுக அரசை பாராட்டுவது போல் உள்ளது.

55
விஜய்யை கிண்டலடிக்கும் திமுகவினர்

ஆற்காடு நவாப் முகமது அலியின் பேச்சை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விஜய்யும், தவெகவினரும் மேடையில் செய்வதறியாது திகைத்தனர்.

 ''தவெக மேடையிலேயே ஆற்காடு நவாப் திமுக அரசுக்கு பாராட்டு பத்திரம் வாசித்து விட்டார். அவர் பேசியது அனைத்தும் உண்மை. சொந்த கட்சி மேடையிலேயே அசிங்கப்பட்ட ஒரே தலைவர் விஜய் தான்'' என திமுகவினர் விஜய்யை சமூகவலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories