ஜனவரி 7ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு

Published : Dec 22, 2025, 01:22 PM IST

School Holiday: நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 7 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பதிலாக ஜனவரி 24 சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

PREV
14
பொது விடுமுறையை தவிர்த்து உள்ளூர் விடுமுறை

விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கொண்டாட்டம் தான். பொது விடுமுறையை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயங்களில் மற்றும் தியாகிகளின் நினைவு தினம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கம்.

24
படுகர் இன மக்கள்

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக வசித்து வரும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி, ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா ஆகிய 8 கிராமங்களில் உள்ளவர்கள் இப்பண்டிகையின் போது விரதம் இருந்து பாத யாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில், இப்பண்டிகையை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு ஜனவரி 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

34
ஜனவரி 7ம் தேதி உள்ளூர் விடுமுறை

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள அறிவிப்பில்: நீலகிரி மாவட்டத்தில் ஸ்ரீ ஹெத்தையம்மன் பண்டிகை நடைபெறும் நாளன்று நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்ததற்கு ஏற்ப எதிர்வரும் 07.01.2026 (புதன்கிழமை) அன்று மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

44
ஜனவரி 24ம் தேதி வேலை நாள்

இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி 1881 (Negotiable Instrument Act 1881)-இன் கீழ் வராது என்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கும் போது மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இதற்கு பதிலாக எதிர்வரும் 24.01.2026 சனிக்கிழமை அன்று இம்மாவட்டத்தில் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories