Published : Dec 22, 2025, 12:58 PM ISTUpdated : Dec 22, 2025, 02:06 PM IST
தமிழக வெற்றி கழகம் சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருக்கும் அதில் எந்தவித சமரசமும் கிடையாது என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய் குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
24
பிறரது நம்பிக்கையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்
முன்னதாக விழாவில் பேசிய விஜய், “இது ஒரு அன்பான மற்றும் அழகான தருணம். அன்பும், ருணையும் தான் அனைத்திற்கும் அடிப்படை. தமிழக மண்ணும் அதுபோன்ற தாய் அன்புடைய மண் தான். பிறரது நம்பிக்கையை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். வழிபாட்டு நெரிமுறைகள் வேறு வேறாக இருந்தாலும் நாம் அனைவரும் சகோதரர்கள்.
34
விஜய் சொன்ன குட்டிக்கதை
பைபிளில் ஏராளமான நல்ல விசயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அந்த வகையில், ஒரு இளைஞனுக்கு எதிராக தனது சொந்த சகோதரர்களே பொறாமைப் பட்டு அவனை பாழும் கிணற்றில் தள்ளிவிடுகின்றனர். பின்னர் அதிலிருந்து அவன் மீண்டு எப்படி அந்த நாட்டையும், தன்னை தள்ளிவிட்ட சகோதரர்களையும் பாதுகாத்தார் என்ற கதை உள்ளது. அனைவரும் அதனைப் படியுங்கள். அந்த குறிப்பிட்ட கதை யாரைப் பற்றியது என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
நிச்சயம் ஒரு ஒளி பிறக்கும். அந்த ஒளி நம்மை வழிநடத்தும். தமிழக வெற்றி கழகம் சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருக்கும். அதில் எந்தவித சமரசமும் கிடையாது.
அரசியலுக்கு வந்த பின்னர் கடவுள் நம்பிக்கை உண்டு என அறிவித்தது ஏன் தெரியமா? உண்மையான நம்பிக்கை தான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க சொல்லலித்தரும். அத்தகைய நம்பிக்கை இருந்தால் போதும், எத்தகையப் பிரச்சனைகளையும் வெல்ல முடியும்” என்று தெரிவித்துள்ளார்.