நான் மதுரை கமிஷனராக இருந்திருந்தால்! CM ஸ்டாலினுக்கு மெயில் அனுப்பிவிட்டு! பொன் மாணிக்கவேல் பரபரப்பு

Published : Dec 22, 2025, 12:18 PM IST

திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில் தீக்குளித்த பூர்ணசந்திரன் குடும்பத்தினரை ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த தற்கொலைக்கு முதல்வர் ஸ்டாலினே காரணம் வரும் தேர்தலில் ஸ்டாலினுக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன் என்றார்.

PREV
14
திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றக் கோரியும் திமுக அரசை கண்டித்தும் டிசம்பர் 18ம் தேதி மதுரையை சேர்ந்த பூர்ணசந்திரன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நரிமேட்டில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆறுதல் தெரிவித்தார்.

24
பூர்ணசந்திரன் தீக்குளித்து தற்கொலை

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: பூர்ணசந்திரனை தற்கொலைக்கு தூண்டியதில் முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு உண்டு. தன் குடும்பமே திமுகவை சேர்ந்தவர்கள் என இறப்பதற்கு முன் பூர்ணசந்திரனே தெரிவித்துள்ளார். பொதுநலத்திற்காக திமுகவைச் சேர்ந்தவர்கள் யார் இறந்தாலும் அவர்கள் எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

34
பொன் மாணிக்கவேல்

பூர்ணசந்திரன் இறப்பை கொச்சைப்படுத்தி, களங்கம் ஏற்படுத்துபவர்கள் கீழ்த்தரமான பிறவிகள். அவர் திமுகவை சேர்ந்தவரானாலும் சிறந்த ஆன்மிகவாதி என்றார். நான் எந்த கட்சி சார்பிலும் இங்கு வரவில்லை. இனி மதுரைக்கு வந்தால் இங்கு வராமல் செல்ல மாட்டேன். அவரது காரிய நாளன்று மதுரையே குலுங்கும் அளவுக்கு முருக பக்தர்கள் அவரது வீட்டுக்கு வரவேண்டும். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த இங்கு வர வேண்டும் என வலியுறுத்தினார்.

44
முதல்வர் ஸ்டாலின்

நான் மதுரை கமிஷனராக இருந்திருந்தால், நான் சட்டத்தின் ஊழியர், அரசு ஊழியர் அல்ல என முதல்வர் ஸ்டாலினுக்கு மெயில் அனுப்பிவிட்டு, நீதிமன்ற உத்தரவை 100 சதவீதம் நிறைவேற்றி இருப்பேன். உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காதவர்கள் போலீசே கிடையாது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் எனக்கு எதிராக வழக்கறிஞராக வாதாடியவர். எனினும் அவரது நேர்மையான பணிக்கு அவருக்கு ஆதரவாக எத்தனை கையெழுத்து என்றாலும் போடுவேன். அவர் எனக்கு துரோகம் செய்தாலும், நான் அவருக்கு நல்லது செய்வேன். முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக வரும் சட்டப்பேரவை தேர்தலில் கடும் பிரசாரம் செய்வேன் என்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories