மாணவர்களுக்கு மாதம் ரூ.8050 உதவி தொகை.! சூப்பர் அறிவிப்பு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு

Published : May 08, 2025, 04:01 PM ISTUpdated : May 08, 2025, 04:02 PM IST

ஐடிஐ மாணவர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க உள்ளன. தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாத உதவித்தொகை மற்றும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும்.

PREV
14
மாணவர்களுக்கு மாதம் ரூ.8050 உதவி தொகை.! சூப்பர் அறிவிப்பு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு
மாணவர்களுக்கான கல்வி திட்டங்கள்

கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்கள் ஆரம்பி கல்வி முதல் உயர் கல்வி வரை பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் ஐடிஐ உள்ளிட்ட தொழிற்பயிற்சியில் பயிலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தொழிற் பழகுநர் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

இதன் மூலம் மாணவர்கள் தொழிற்சாலைகளில் பயிற்சியின் போதே மாதம், மாதம் உதவித்தொகை பெற முடியும். இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  
 

24
தொழிற் பழகுநர் பயிற்சி முகாம்

மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் இந்திய அரசு, தென்மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் இணைந்து ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பல்வேறு தொழிற் பிரிவுகளை சேர்ந்த பயிற்சியார்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக, மாவட்ட அளவிலான தேசிய தொழிற்பழகுநர் முகாம் (PM National Apprenticeship Melai வருகிற 13.05.2025 அன்று காலை 9.00 மணியளவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கிண்டியில் நடைபெற உள்ளது. 
 

34
உதவித் தொகையாக குறைந்த பட்சம் ரூ.8050

இதில் அரசு மற்றும் தனியார் தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்க ஐ.டி,ஐ, படித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8, 10. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தொழிற் பழகுநராக தேர்வு செய்ய உள்ளனர். தற்போது தொழிற் பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக குறைந்த பட்சம் ரூ.8050/- மற்றும் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate) வழங்கப்படும். 

44
தொழிற் பழகுநர் பயிற்சி முகாம்- பதிவு செய்ய அழைப்பு

இதுவரை தொழிற் பழகுநர் பயிற்சி (NAC) முடிக்காத அரசு, தனியார் தொழிற் நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள்  www.apprenticeshipindia gov.in இணையதள முகவரியில் பதிவு செய்து அசல் கல்வி சான்றிதழ்களுடன் இந்த முகாமில் கலந்து கொள்ளுமாறு கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories