மேலும், மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் சென்னை-32. கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண் (MR. No.) வங்கி புத்தகம் நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஐகடே தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பள்ளி இறுதி வகுப்பு தவறியவர்கள், 10-ம் வகுப்பு தோல்வி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.200,
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300,
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400,
பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வழங்கப்படவுள்ளது. எனவே பட்டதாரிகளுக்கு மாதம் 600 வீதம் 7200 ரூபாய் உதவித்தொகையானது தமிழக அரசு வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.