போலீஸ் மேல கைய வச்சா என்ன நடக்கும்னு காட்டுறேன்! ஒரு கோடி ரூபாய் நிதியுதவியை அறிவித்த கையோடு கொதித்த முதல்வர் ஸ்டாலின்!

Published : Aug 06, 2025, 10:10 AM IST

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முதல்வர் ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

PREV
14

திருப்பூர் மாவட்டம் மடத்துகுளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் குடிமங்கலம் பகுதியில் உள்ளது. இந்த தோட்டத்தில் வேலை செய்து வந்த தந்தை மற்றும் மகனுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் தமது ஓட்டுநருடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

24

அப்போது தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான மோதலை தடுக்க முயன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மேலும் ஓட்டுநருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்த தோட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய தந்தை- மகனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

34

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிப்புரிந்துவந்த சண்முகவேல் (57) மற்றும் ஆயுதப்படைக் காவலர் அழகுராஜா ஆகிய இருவரும் நேற்று இரவு 11.00 மணியளவில் ரோந்துப் பணியின்போது சிக்கனூத்து அருகில் தனியரின் தோட்டத்து சாலையில் நடந்த அடிதடி பிரச்சனை குறித்து தகவல் அறித்ததும் விசாரிக்க சம்பவ இடத்திற்குச் சென்றபோது அடிதடி பிரச்சனையில் ஈடுபட்டிருந்த மூவர் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஆயுதப்படை காவலர் ஆகிய இருவரையும் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டியதில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.

44

சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். சண்முகவேல் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories