தனியார் வேலைவாய்ப்பு முகாம்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் 07.12.2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3.00 மணி வரை எம்.வி.எம். அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, திண்டுக்கல் வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000 த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை விண்ணப்பம் தகுதிக்குட்பட்டு வழங்கப்படும் எனவும் இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான பதிவுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.