தற்போது இந்த இரண்டு ரயில்களின் சேவையையும் நீட்டிப்பு செய்து ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது சம்பல்பூர் ஈரோடு இடையிலான சிறப்பு ரயில் (வண்டி எண்:08311) டிசம்பரில் 11ம் தேதி, 18 மற்றும் 25ம் தேதிகளிலும், ஜனவரியில் 1,8, 15, 22, 29 ஆகிய தேதிகளிலும், பிப்ரவரியில் 5,12, 19,26 மற்றும் மார்ச் மாதம் 7ம் தேதியும் இயக்கப்படும் மேற்கண்ட நாட்களில் இந்த ரயில் சம்பல்பூரில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்படும்.
மறுமார்க்கமாக ஈரோடு சம்பல்பூர் இடையிலான சிறப்பு ரயில் (வண்டி எண்:08312) டிசம்பரில் 13, 20, 27ம் தேதிகளிலும், ஜனவரியில் 3, 10, 17,24, 31ம் தேதிகளிலும், பிப்ரவரியில் 7,14, 21, 28ம் தேதிகளிலும், மார்ச்சில் 7ம் தேதியும் இயக்கப்படும். மேற்கண்ட நாட்களில் இந்த ரயில் ஈரோட்டில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும்.