சென்னையில் முதியவருடன் தங்கிய இளம்பெண் மரணம்; நடந்தது என்ன?

Published : Nov 26, 2024, 12:44 PM ISTUpdated : Nov 26, 2024, 01:58 PM IST

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் இளம்பெண் ஒருவர் மது அருந்திய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். முதியவருடன் விடுதியில் தங்கியிருந்த அவர், நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

PREV
14
சென்னையில் முதியவருடன் தங்கிய இளம்பெண் மரணம்; நடந்தது என்ன?
Chennai News

சென்னை சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த ஜோதி  என்பவருக்கும் வில்லிவாக்கத்தை சேர்ந்த சசிகலா (50) என்பவருடன் நீண்ட நாட்களாக தகாத உறவு இருந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். சசிகலாவின் 2வது மகள் ரம்யா என்பவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தாய் வீட்டுக்கு வந்து தங்கி இருந்துள்ளார். அப்போது முதியவர் ஜோதிக்கும் ரம்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

24
chennai women

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ரம்யாவும், ஜோதியும் வேளச்சேரியில் உள்ள பிரபல தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். ரம்யாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. விடுதிக்கு வரும்போதே 6 பீர் பாட்டில்கள் வாங்கி வந்துள்ளனர். இரவில் ரம்யா மட்டும் மூக்கு முட்ட 4 பீர் குடித்துவிட்டு முதியவருடன் தூங்கியுள்ளார். 

34
Young Women

அப்போது திடீரென நள்ளிரவில் எழுந்த ரம்யா தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த முதியவர் மருத்துவரிடம் செல்லலாமா என கேட்டுள்ளார். அதற்கு அந்த இளம்பெண் வேண்டாம் என்று கூறிவிட்டார். பின்னர் அதிகாலையில் எழுந்து மீண்டும் எஞ்சியிருந்த இரண்டு பாட்டில் பீரையும் குடித்துள்ளார். குடித்த சிறிது நேரத்தில் ரம்யா மீண்டும் நெஞ்சுவலியால் துடித்துள்ளார். 

44
Police investigation

இதனையடுத்து ஓட்டல் ஊழியர்களின் உதவியுடன் முதியவர் ஜோதி ஆம்புலன்ஸ் மூலம் ரம்யாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து ரம்யா உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர்  அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்தாரா? வேறு ஏதாவது காரணமா? என்பது தெரியவரும். 

click me!

Recommended Stories