Published : Jul 22, 2025, 11:57 AM ISTUpdated : Jul 22, 2025, 11:58 AM IST
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் வினாத்தாள்கள் தனியார் பேருந்துகளில் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்பட்டதும், விடைத்தாள் பெட்டிகள் சேதமடைந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.வினாத்தாள் நடைமுறையில் மாற்றம் செய்யப்படும் என TNPSC அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பணியில் இணைய வேண்டும் என்பது பல லட்சம் இளைஞர்களின் கனவாக உள்ளது. எனவே இரவு பகலாக அரசு பணி தேர்விற்காக தயாராகி வருகிறார்கள். பல கனவுகளோடு எழுதும் தேர்வில் சரியான முறையில் முடிவு வெளியாகும் என காத்திருக்கின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து தேர்வுகள் நியாயமான முறையில் நடைபெறும் என அரசு உறுதி அளித்திருந்தது.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு ஜூலை 12, 2025 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் (VAO), ஜூனியர் உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஸ்டெனோ-தட்டச்சர் மற்றும் பிற குரூப்-4 பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்பட்டது. இந்த தேர்வை 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 பேர் தேர்வை எழுதினார்.
24
டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாத்தாள்
இந்த சூழலில் மதுரையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான வினாத்தாள்கள் பாதுகாப்பற்ற முறையில் தனியார் பேருந்துகளில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து வினாத்தாள்கள் அனுப்பப்பட்டன. ஆனால் பாதுகாப்பு ஏற்பாடாக A4 காகிதத்தில் சீல் வைத்து, தனியார் பேருந்துகளில் அனுப்பப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளானது. இது வினாத்தாள்கள் கசிவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது.
அடுத்தாக சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வின் விடைத்தாள் அடங்கிய பெட்டிகளில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டிருந்ததாக கூறப்பட்டது. இந்தப் பெட்டிகள் முறையாக சீல் வைக்கப்படாமல், அட்டைப் பெட்டிகளில் உடைப்புகள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
34
டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், சென்னைக்கு அனுப்பப்பட்ட சேதமடைந்த பெட்டிகளில் விடைத்தாள்கள் இல்லையென தெரிவித்துள்ளார். குரூப்-4 விடைத்தாள்கள் அனைத்தும் டிரங்க் பெட்டிகளுக்குள் வைத்து கடந்த 14ம் தேதியே சென்னை கொண்டுவரப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
அனைத்து விடைத்தாள்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் தற்போது அட்டை பெட்டி சேதாரம் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. அந்த பெட்டியில் என்ன உள்ளது. எங்கே உடைப்பு ஏற்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட இருப்பதாக தெரிவித்தார். அடுத்ததாக மதுரையில் வினாத்தாள் பாதுகாப்பு இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படதாகவும், மதுரை ஆட்சியர் விசாரணை செய்து அறிக்கை அளித்ததாக தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி வினாத்தாள்கள் எப்போதும் பிரதான கருவூலகங்களுக்கு அனுப்பப்படும். அங்கிருந்து வருவாய் துறை மூலம் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு செல்லும், இனி தாசில்தார் கைகளுக்கு வினாத்தாள்கள் செல்லாது என விளக்கம் அளித்தார். இனி கருவூலங்களுக்கும், முக்கிய தேர்வு மையங்களுக்கு கொண்டும் செல்லும் பணியை நேரடியாக டிஎன்பிஎஸ்சியே மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார். வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படாது என எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.